கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலை!
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஆறுபுரையும் நேற்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
நேற்று குறித்த வழக்கினை எடுத்துக்கொண்ட கிளிநாச்சி நீதவான் நீதிமன்றம், குறித்த ஆறு பேரையும் விடுதலை செய்தது.
இவ்வழக்கு எதிர்வரும் 7ம் மாதம் இரண்டாம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும், அன்றைய தினம் குறித்த ஆறுபேரும் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.