காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்தில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடாரி, வோக்கிடோக்கி இரண்டு, கணினி ஹார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வரும் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.