கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது? கண்டறிந்து சொன்னால் பரிசு!
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோரம் இருக்கும் ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீற்றர் உயரமான பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அதுமட்டுமின்றி தலைகீழாகவும் உள்ளது. இதில் சில ஸ்காண்டிநேவிய – பாணி எழுத்துகளும் உள்ளன.
பிரான்ஸ் புரட்சி நடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1786 மற்றும் 1787 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் தான் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுடன் ஒரு கப்பல் மற்றும் சுக்கான் மற்றும் ஒரு சிலுவையை சார்ந்திருக்கும் ஒரு புனித இதயம் என சங்கேத குறியீடுகளும் சில கலந்துள்ளன.
உள்ளூர் கல்வியாளர் இந்த கல்வெட்டு குறித்து கூறிய விளக்கங்கள் அந்தளவிற்கு போதுமானதாக இல்லை, அது வேறு எதையோ சொல்ல நினைக்கிறது என்றும், இது பழைய பிரிட்டன் அல்லது பஸ்க் மொழியிலானது என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலரோ அரை கல்வியறிவு கொண்ட மனிதனால் செதுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
இந்த எழுத்துக்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஒலிக்குறிப்புகள் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்தியை கொண்டிருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
இப்படி ஒவ்வொருவர் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதால், அதற்கு சரியான முடிவு கிடைக்காமல் ப்ளோகேஷ்டல் கிராம நிர்வாகம் கடைசியாக இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ப்ளோகேஷ்டல் கிராம மேயர் டாமினிக்கி காப் கூறுகையில், நாங்கள் தங்களை சுற்றியிருக்கும் வட்டாரத்தில் உள்ள சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களிடம் விசாரித்துவிட்டோம்.
ஆனால் அவர்களால் அந்த பாறையில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் கல்வெட்டுக்கள் குறித்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொன்னால், அ
அவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் பரிசு தரவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.