கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்கு பற்றல் இன்றி இடம் பெறவுள்ளதாக அறிவிப்பு!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.