கடற்தொழிலுக்குச் சென்ற முன்னாள் போராளி வலிப்பால் மரணம்
யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதான முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
போரில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இவரது உடலில் செல் துண்டுகள் காணப்படுவதாகவும்? இதனால் அவ்வப்போது இவர் வலிப்பால் துன்பப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பெண் குழந்தையின் தந்தையாகிய அப்பையா, இன்று கரைவலை கடற்தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய தருணத்தில், வலிப்பு ஏற்பட்டு, கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களின் முன்னர் பூநகரியை சேர்ந்த குணசீலன் வசீகரன் என்ற 31 வயதான முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியாத நோயினால், திடீர் மரணமடைந்த சம்பவம் இங்கே நினைவுகூரத்தக்கது.