Main Menu

ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐக் கடந்துள்ளது.

இதன்படி இதுவரை 1270 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம் இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  அத்துடன் 7 ஆயிரத்து 585 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.