Day: December 31, 2021
நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சூழலுக்குமேலும் படிக்க...
தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா
சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன்மேலும் படிக்க...
ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐக் கடந்துள்ளது. இதன்படி இதுவரை 1270 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசுமேலும் படிக்க...
புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும்!
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் போர்வைகள் போன்ற ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் சில்லரைமேலும் படிக்க...
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரா.சம்பந்தன் தலைமையிலான குறித்த குழுவில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள்மேலும் படிக்க...
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்!
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகலமேலும் படிக்க...