ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார்
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி உடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.