ஐப்பானிலுள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றின் இணைய தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பாக தகவல் வெளியாகியது!
கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க தலைமையகம் மற்றும் ஜப்பானில் ஒசாகா ப்ரிபெக்சரிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், பெரும் இணைய தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவம் சம்மந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க தலைமையகம் மற்றும் ஒசாகா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஒரு பெரிய தொடர் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகி இருந்தன. இதில் சீன மக்கள் விடுதலை இராணுவம் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுவதாக சில வட்டாரங்கள் மைனிச்சி ஷிம்பன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளன.
மேலும் இந்த தாக்குதல்கள், கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்கத்தைத் தவிர ஏனைய உள்ளூராட்சி அமைப்புகளையும் குறி வைத்ததாகக் கூறப்படுகிறது. தகவல் கசிவுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கை செய்தி தெரிவிக்கின்றன.
அத்துடன் மைனிச்சி ஷிம்பன், கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க அதிகாரி ஒருவரிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபோது, அவர் கூறியதாவது, “நாங்கள் ஒரு சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியாது.
ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாங்கள் பொலிஸாரிடம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்.
அதன்பின்னர் நாங்கள் அரச, அரசாங்க சேவையகங்களை சோதித்தோம். ஆனால் அங்கே தகவல் எடுக்கப்படவில்லை என்பதைக் காட்டும் பதிவுகள் எதுவும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இன்று வரை, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், முக்கிய மின்னணு உற்பத்தியாளர் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப், பெரிய கனரக தொழில்துறை நிறுவனமான ஐ.எச்.ஐ.கார்ப் மற்றும் கியோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட சுமார் 200 நிறுவனங்கள் தாக்குதல்களில் குறி வைக்கப்பட்டுள்ளன என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.