Main Menu

ஐசிசி உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஃப் டு பிளேசிஸ் தலைமையிலான இந்த அணியில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலக்கி வரும் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ள.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருக்கும் ஹஷிம் அம்லாவின் பெயர் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த அம்லாவின் கடைசி ஆண்டுக்கான பேட்டிங் சராசரி வெறும் 35.26ஆக இருக்கிறது. இந்நிலையில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் கிறிஸ் மோரிசின் பெயர் அணியில் சேர்க்கப்படவில்லை.