ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…!
ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பிப்பதற்கான ஒரு தேசிய ரீதியிலான செயற்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அடிப்படையிலான கட்சி ஆர்வலர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் இடம்பெரும் கலந்துரையாடல்களின்போது அவர்கள் தங்களின் கருத்துக்களையும் திட்டங்களையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் ருவான் விஜேவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அதை அவர் ஏற்க மறுத்தால், அந்த இடத்திற்கு தகுதியான கட்சியின் வேறு மூத்த உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.