ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடக்கம், 137 விமானங்கள் தாமதம்!
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடங்கியதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் நேற்று சுமார் 5 மணி நேரம் ஏர் இந்திய நிறுவனத்தின் பயணிகள் சேவை (PSS) சர்வர் முடங்கியது.
விமானங்களின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட தகவல்கள் தெரியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் குவிந்ததால், சுமார் 149 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் அதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் சராசரியாக 3 மணி நேரம் தாமத்துக்கு பின் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.