Main Menu

எட்டாம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதி சேவையில்

எட்டாம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் சில தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 5 ஆம் திகதி இன்று, எட்டாம் இலக்க மெற்றோவில் ஐந்தில் ஒரு சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரை Reuilly-Diderot நிலையத்தில் இருந்து Créteil Pointe du Lac நிலையம் வரை சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சில நிமிடங்களுக்கு முன்பாக இத்தகவலை RATP அறிவித்துள்ளது. தவிர, முதலாம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோ சாரதி இல்லாமல் தானியங்கி மூலம் இயக்கப்படுவதால் அவை தடை இன்றி பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.