எகிப்தில் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி
எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.
எகிப்தின் மேற்கில் அமைந்துள்ளது சினாய் தீபகற்பம், மிகவும் பதற்றமான பகுதியாக இது கருதப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் இன்று காலை இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீஸ் சோதனைச்சாவடி உருக்குலைந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.