உலக கிண்ண கிரிக்கட் போட்டி – இந்திய வீரர்கள் 15 ஆம் திகதி அறிவிப்பு
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் இறுதி தேர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு மேற்கொள்ளப்படும் கூட்டத்தில் இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கோலியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும், தெரிவிற்கான கூட்டம் நடைபெறும் அதே தினம் மாலை இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணிக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
அன்றைய போட்டி மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகளின் தெரிவு, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கட்ட பேரவை காலக்கெடு விதித்துள்ளது.
எப்படியிருப்பினும். இந்திய அணிக்கு தெரிவாகும் உறுப்பினர்கள் தம்மை தயார்படுத்த மேலதிக நேரத்தை செலவிட வேண்டும் என இந்திய தெரிவுக் குழுவினர் விரும்புகின்றனர்.
இந்தநிலையில், கடந்த பெப்பிரவரி மாதம் இந்திய அணிக்காக 20 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தெரிவுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், அவர்களில் 15 பேரை தெரிவு செய்வதற்கு அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.