Main Menu

உலக அளவில் நான்கரை இலட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு!

உலக அளவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை இதுவரை நான்கரை இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்ட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 இலட்சத்து 270 பேராக ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 264ஆகப் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 265ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 84 இலட்சம் பேரில் 44 இலட்சத்து 14 ஆயிரத்து 991பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பெரும் அழிவை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் நேற்று மட்டும் 809 பேர் மரணித்த நிலையில் மொத்த மரணங்கள் ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 941ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், அந்நாட்டில் நேற்று 26 ஆயிரத்து 71பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 22 இலட்சத்து 34 ஆயிரத்து 471ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 26 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவையும் விட தற்போது அதிக உயிரிழப்புக்களை சந்தித்துவரும் பிரேஸிலில் நேற்றும் ஆயிரத்து 209 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 46 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளன.

மேலும், நேற்றுமட்டும் அங்கு 31 ஆயிரத்து 475 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 9 இலட்சத்து 60 ஆயிரத்து 309ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட, அதிக பாதிப்புக்களுக்குள்ளாகிய நாடுகளில் ரஷ்யா 3 ஆவது இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 843பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 5 இலட்சத்து 53 ஆயிரத்து 301ஆகக் காணப்படுகிறது.

அத்துடன், அந்நாட்டில் நேற்று 194 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 7 ஆயிரத்து 478ஆக அதிகரித்துள்ளன.

அமெரிக்காவை அடுத்து அதிக பரிசோதனைகளை மேற்கொண்ட நாடாகவுள்ள ரஷ்யாவில் மொத்தமாக ஒரு கோடியே 67 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியா, மெக்ஸிகோ, சிலி, பேரு, சுவீடன் மற்றம் பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

பகிரவும்...
0Shares