உலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது
உலகிலேயே .மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் புகாட்டி(Bugatti) நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
இந்தக் கார் குறைந்தபட்சம் ஒரு கோடி டொலருக்கு மேலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. காரை வாங்கியவரின் பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய காரானது Ford Fiesta வின் எஞ்சினை விடவும் 20 மடங்கு அதிக வலுவுடைய எஞ்சினைக் கொண்டுள்ளது. புகாட்டியின் 110ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய கார் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது