உலகின் நிலைத் தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா
உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய துணைத் தூதர் அமர்நாத் தெரிவிக்கையில், ”பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக இருக்கிறது.
ஐ.நா உள்ளிட்ட பல்வேறு பொது சபைகளில் இந்தியாவுக்கு எதிரான பொய்க் கருத்துக்களைப் பரப்ப பாகிஸ்தான் முயன்று வருகிறது. காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி தோல்வியை கண்டு வருகிறது.
இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் சர்வதேச சபைகளில் பாகிஸ்தான் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.