உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் கொல்லப் பட்டவர்களுக்கு 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடு
உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு சங்ரில்லா விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2.8 மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.