உப்பில்லா கஞ்சியுடன், முள்ளிவாய்கால் நினைவேந்தல்…
ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் 10 வது ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று சனிக்கிழமை (18) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லா கஞ்சியானது அவ் மக்களை நினைவுபடுத்தும் முகமாக மன்னாரில் வழங்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவக்குற்பட்ட பள்ளமடு பகுதியில் பொது மக்கள் அனைவருக்கும் குறித்த கஞ்சியானது வழங்கப்பட்டதுடன் பாதிக்கபட்ட மக்கள் நினைவாக மன்னார் சாந்திபுரம் பாடசாலை மற்றும் ஈச்சலவாக்கை பொது மண்டபம் பகுதியில் மரம் நாட்டியும் வைக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தனது 4 பிள்ளைகளை இழந்த தாய் ஈச்சளவாக்கை பகுதியில் இறந்த 26 பேரின் நினைவாக ஆலயபகுதியில் மரங்கண்றுகளை நாட்டி வைத்தார்.
இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் படசாலைகள் பொது இடங்கள் ஆலயங்கள் என தெரிவு செய்யப்பட இடங்களில் முள்ளிவாய்கால் மண்ணில் இறந்த மக்களின் நினைவாக என சுமார் 5 ஆயிரம் மரக்கண்றுகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் நாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. #முள்ளிவாய்கால் #மன்னார்சாந்திபுரம் #சமூகபொருளாதாரமேம்பாடு