உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி?

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியினை வழங்குமாறு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் 13 வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையின் போது, மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு குறித்து தி.மு.க. தலைவரிடம் மாவட்டத் தலைவர்க்ள விளக்கியள்ளனர். அவருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் பதவியை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த கோரிக்கைகளை செவிமடுத்த மு.க.ஸ்டாலின் இது குறித்து எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளைஞர் அணி செயலாளர் பதவியை ஏற்கனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...