Main Menu

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares