உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்தியசாலைகளுக்கு சென்று திடீர் மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மரண விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றயை தினம் உயிரிழந்தவர்களின் சடலங்களை உடனடியாக உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனால் உயிரிழந்த நபர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு சம்பந்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தபடட் திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளது.