Main Menu

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் பின்னர் இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது இரவும் உக்ரைனை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலினால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியநிலையில் கைதிகள் பரிமாற்றம் தொடருமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நகரங்கள் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares