ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் : கறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடினார் தினேஸ் குணவர்த்தன!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(புதன்கிழமை) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை அமர்வுகள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் இன்றைய தினம் ஆளும் கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்துடன், எதிர்கட்சியினர் கறுப்பு ஆடையணிந்திருந்தனர்.
இதன்போது ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், ஆளும் எதிர்கட்சிக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டிருந்தது.
எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, ஹக்கீம் கறுப்பு பட்டி அணியாமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
“உங்களுக்கு வெக்கமாக இல்லையா? நீங்கள் இங்கே எழுந்து நின்று பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் கறுப்பு பட்டியும் அணியவில்லை. கறுப்பு டையும் அணியவில்லை.“ என தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.