ஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா
ஈரானுடன் போரிடப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா ஆயுதங்களை தயாரிப்பது, தமது பாதுகாப்புக்கே தவிர்ந்து ஈரானுடன் போரிடுவதற்கு அல்ல.
ஈரான் ஏனைய நாடுகளை போன்று சாதாரணமான முறையில் செயற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகவும் மைக் போம்பேயோ குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான முறுகல் நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா மீது ஈரான் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...