Main Menu

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறிவிட்டது- பிரிட்டன் மருத்துவர்

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறியுள்ளது என காசாவின் தென்பகுதியில் பணிபுரியும் பிரிட்டனின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் மருத்துவர் டொம் பொட்டோகர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இது காசாவின் மற்றுமொரு பேரழிவின் நாள் என அவர் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து வரும் தகவல்கள், கதைகள் ,முற்றிலும் கொடுரமானவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பாக இந்தோனேசிய மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் கதைகள் மிகவும் கொடுமையானவையாக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

‘அதாவது இங்கு என்ன நடக்கின்றது என்பதை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம் ,ஜெட் விமானங்களின் தொடர்ச்சியான சத்தத்துடன் “என அவர் தெரிவித்துள்ளார்.

 

கம்போடியா கொலைகளம் என்றால் காசா தற்போது கொல்களம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து  குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் மருத்துவர்,நாங்கள் காலை வரை சத்திரகிசிச்சையில் ஈடுபட்டுள்ளோம்,பயங்கரமான வெடிகாயங்களிற்கு சிகிச்சையளித்துவருகின்றோம் என  தெரிவித்துள்ளார்.

காலில் காயத்துடனும் தோளில் காயத்துடனும் உடலில் வேறு பெருங்காயத்துடனும் ,மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளமை இதுவரை தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares