Main Menu

இலங்கையில் மேலும் 21 கிராமங்கள் இன்று முடக்கம் – இராணுவ தளபதி அறிவிப்பு

நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட டோலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இலுபகந்த, பொத்துபிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும் , கலவானை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பனாபொல, குடுபிட்டிய, குடா, தெல்கொட கிழக்கு- மேற்கு, தவ்கலகம, தன்டாகமுவ, கொஸ்வத்தை, தப்பரஸ்கந்த, வத்துராவ , வெம்பியகொட, வெதகல கிழக்கு – மேற்கு மற்றும் தவுகலகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட புனித கொம்பஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...