இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி
இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவத் தயாராகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர், வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிசீல்ட், சினொபாம் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை மக்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதேபோல், நாட்டில் தற்போது, அஸ்ட்ரா செனேகா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சினோபாம் தடுப்பூ நாட்டில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், விரைவாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.