இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாவதற்கு, மக்கள் இடமளிக்க கூடாது – சிறிசேனா
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று, இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும், என இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, இலங்கை அதிபர் சிறிசேனா, நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும், ஒற்றுமையை கைடைப்பிடிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாவதற்கு, மக்கள் இடமளிக்க கூடாது எனவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை சென்ற பிரதமர் மோடி, மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து இருநாட்டு ஒற்றுமை குறித்து பேச்சி நடத்தினார். பின்னர், ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொதுவான அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாகவும், அந்த அச்சுறுத்தலை இணைந்து முடிறியடிக்க வேண்டும் என்பதில் தானும், சிறிசேனாவும் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.