Main Menu

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கசகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.