இரணைமடு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி- இரணைமடு சேவைச்சந்தை அருகே இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.