இயல்பு வாழ்க்கைக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத் தாக்குதலின் நாட்டின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட புரசவி அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்தினபிரிய குறுகிய அரசியல் நோக்கங்களை புறந்தள்ளி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். இன, மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.