Main Menu

இந்திய மீனவர்கள் நால்வர் நெடுந்தீவில் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இன்று(18) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares