இந்தியா – அடுத்த இரு வாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்களில் மூன்றாவது அலை வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அடுத்த இரு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இதேபோன்று அதிகரித்தால் மூன்றாவது அலை ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 ஆயிரத்து 595 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்து 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.