Main Menu

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பலஸ்தீன பிரஜை நாடுகடத்தல்

சரியான காரணமின்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். 

26 வயதுடைய பலஸ்தீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். 

அவர் இந்தியாவில் உயர் கல்வி கற்று வரும் நிலையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

நேற்று இரவு இந்தியாவின் பெங்ஙகளூரில் இருந்து இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

அவர் இலங்கைக்கு வருகை தந்தமைக்கான காரணத்தை தௌிவாக தெரிவிக்காததுடன், அவர் தங்க போகும் இடம் மற்றும் விஜயம் செய்ய உத்தேசித்துள்ள இடங்கள் என்பன தொடர்பில் சரியான தௌிவின்மை காரணமாகவே நாடுஞ கடத்தப்பட்டுள்ளார். 

அவர் இலங்கைக்கு வந்தமைக்கான காரணத்தை சரியாக கூறாததையடுத்தே, அவர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.