Main Menu

இடி விழுந்ததில் 6 பெண் தொழிலாளிகள் படுகாயம்

இன்று பகல் திடீரென  பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி விழுந்ததில் குறித்த  மரம் முறிந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளிகள் காயமடைந்த நிரலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . 

 லிந்துலை .- இராணிவத்தை தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது இன்று (08) பகல் திடீரென  பெய்த கடும் மழை காரணமாக அங்கு  இருந்த மரத்தின் மீது இடி விழுந்ததால் குறித்த  மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . 

இவர்களில் மூன்று பெண் தொழிலாளிகள் குறித்த இராணிவத்தை தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதோடு ஏனைய மூன்று பெண் தொழிலாளிகளும் லிந்துலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்

பகிரவும்...