அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே அரசாங்கத்துக்கு இருக்கின்றது- ஜெயக்குமார்
அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.
ஆனால் அரசாங்கம், அதில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சி கொண்டு, சோதனைகள் ஊடாக களங்கம் ஏற்படுத்த நினைத்தால், நிச்சயமாக அது ஒருபோதும் நிறைவேறாது.
அத்துடன் அ.தி.மு.க.வை ஒருபோதும் அழிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...