அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது.
தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர்.
7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 20 கிலோகிராம் போதைப்பொருள் அந்தப் பொட்டலத்தில் அடங்கியிருந்தது.
அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மெல்பர்ன் நகரின் மற்றொரு பகுதியில் 21 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.