அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத் தனமானது – சஜித்!
அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டக்களத்தின் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் தமது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.