Main Menu

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி – யாழ் மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் M.R. ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த பிரிகேடியர் ரூவான் பெர்ணாண்டோ, லெப்டினன்ட் கேணல் சமிந்த கருணாதிலக ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.