அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார்.
நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நிகோல் பாஷின்யனும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்திய நிலையில் அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நிகோல் பாஷின்யன் கூறுகையில், ‘என்னையும் எனது அமைச்சர்களையும் பதவி விலகுமாறு வலியுறுத்தியதன் மூலம், ராணுவம் எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனை எதிர்த்து, ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். இராணுவத்துக்குப் பயந்து நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். நாட்டுக்கு இப்போதைய தேவை பேச்சுவார்த்தைதானே தவிர, மோதல் இல்லை’என கூறினார்.
இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகோல் பாஷின்யனின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிறது. இதற்கிடையே, ராணுவத் தலைமைக்கும் பிரதமா் பாஷின்யனுக்கும் இடையிலான மோதலும் வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார்.