அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவால் அதிகரிப்பு
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 தசம் 5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத் தொகை ஆயிரத்து 839 தசம் 6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்திற்கான பிரதான மூலங்களாக வரி வருமானம், வரி தவிர்ந்த வருமானம், அரசாங்கத்திற்குக் கிடைத்த திரும்பச் செலுத்தாத நிதி என்பவற்றைக் குறிப்பிடலாம.;