Main Menu

அர­சி­யல்­வா­திகள், அரச ஊழி­யர்­களின் செயற்­பா­டு­களால் மக்கள் அதி­ருப்தி – ஜனா­தி­பதி

அர­சி­யல்­வா­திகள் மற்றும் அரச ஊழி­யர்­களின் செயற்­பா­டு­களின் கார­ண­மாக மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளனர். அதனை மாற்­று­வ­தற்கு இரு தரப்­பி­னரும் பொறுப்­பு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட வேண்டும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருக்­கிறார். 

வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் மோட்டார் வாகன போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான வேர­ஹெர அலு­வ­ல­கத்­துக்கு திடீர் கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­ட­போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

இவ்­வி­ஜ­யத்தின் போது நிறு­வன அதி­கா­ரி­க­ளிடம் ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில், 

அரச நிறு­வ­னங்­க­ளுக்கு சேவையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வரு­கை­த­ரு­கின்ற பொது மக்­கள் எவ­ரையும் அசௌ­க­ரி­யத்­துக்கும் உள்­ளாக்­காது உட­ன­டி­யாக சரி­யான மற்றும் வினைத்­தி­ற­னான சேவையை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வது அனைத்து அரச ஊழி­யர்­க­ளி­னதும் பொறுப்­பாகும்.

அரச நிறு­வ­னங்­களில் சேவை­களை வழங்­கும்­போது எந்­த­வி­த­மான முறைக்­கே­டு­களும் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. நேரம் அனை­வ­ருக்கும் மிகவும் பெறு­ம­தி­யா­ன­தாகும். எனவே சேவை பெறு­நர்­க­ளுக்கு உட­ன­டி­யாக தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொடுப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். தொழில்­வல்­லு­னர்­களைப் போன்று சாதா­ரண மக்­க­ளுக்­கான சேவை­யி­னையும் உட­ன­டி­யாக நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்பட வேண்டும். 

சேவை­யொன்றை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வருகை தரு­கின்ற ஒரு­வ­ருக்கு அதனை பொறுப்­பேற்ற நேரத்தை குறிப்­பிட்டு, மீண்டும் அதனைப் பெற்­றுக்­கொள்ள வர வேண்­டிய நேரத்­தையும் அறி­விப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும். அதன் மூலம் நிறு­வ­னத்தில் வீணாக நேரத்தைக் கழிக்­காது தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு மக்­க­ளுக்கு முடி­யு­மாக இருக்கும். 

நாட்டின் அதி­க­ள­வான மக்­க­ளுக்கு சேவை­யினை வழங்கும் நிறு­வ­ன­மான மோட்டார் வாகன போக்­கு­வ­ரத்து திணைக்­களம் போன்ற நிறு­வனம் எப்­போதும் முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இதன்­போது ஊழல், மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­கா­தி­ருப்­ப­தற்கு அனைத்து அதி­கா­ரி­களும் உறு­தி­யாக செயற்­பட வேண்டும். ஊழியர் வெற்­றி­டங்கள் இருக்­கு­மானால் 54,000 பட்­ட­தா­ரி­க­ளி­லி­ருந்து பொருத்­த­மா­ன­வர்­களை அதற்­காக தெரி­வு­செய்ய முடியும்.

நடை­மு­றை­யி­லுள்ள முறை­மைகள் ஒரு மாத காலப்­ப­கு­தியில் மாற்­றப்­பட வேண்டும். அதனைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக மீண்டும் வருகை தருவேன். அர­சி­யல்­வா­திகள் மற்றும் அரச ஊழி­யர்­களின் செயற்­பா­டு­களின் கார­ண­மாக மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளனர். அதனை மாற்­று­வ­தற்கு இரு தரப்­பி­னரும் பொறுப்­பு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட வேண்டும் என்றார். 

புகைப்­படம் எடுப்­பது முதல் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் வழங்கும் வரை­யி­லான அனைத்து பிரி­வு­க­ளையும் ஜனா­தி­பதி பார்­வை­யிட்டார். அத­னைத்­தொ­டர்ந்து சிரேஷ்ட அதி­கா­ரிகள் உள்­ளிட்ட அலு­வ­லக பணிக்­ குழா­மி­னரையும் சந்­தித்து நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் குறித்து கேட்­ட­றிந்தார். கொத்­த­லாவல பாது­காப்பு பல்­கலைக்­க­ழ­கத்தின் வைத்­தி­ய­சா­லைக்கும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொண்டார்.

இதன் போது அதி­கா­ரிகள் மத்­தியில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி,  

இவ்­வைத்­தி­ய­சா­லையில் நிலவும் அனைத்து குறை­பா­டு­க­ளையும் உட­ன­டி­யாக நிவர்த்­தி­செய்து அதனை முழு­மை­யாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

இவ்­வைத்­தி­ய­சா­லையில் 68 விசேட வைத்­தி­யர்­க­ளுக்­கான தேவை இருந்­த­போதும் அது 40 பேரின் மூலமே நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது. சுமார் 100 சாதா­ரண வைத்­தி­யர்­க­ளுக்­கான தேவை உள்ள போதும் அதனை சுமார் 20 வைத்­தி­யர்­களே நிறை­வேற்றி வரு­கின்­றனர்.

700 கட்­டில்கள் மற்றும் 9 வாட்­டுக்­களைக் ­கொண்ட இவ்­வைத்­தி­ய­சா­லையில் தற்­போது 4 வாட்­டுக்கள் மாத்­தி­ரமே செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அனைத்து குறை­பா­டு­க­ளையும் உட­ன­டி­யாக நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். வெற்­றி­டங்­க­ளுக்­காக ஆட்­சேர்ப்பு செய்­யும்­போது அதற்கான அறிவித்தல்களை பிரசுரித்து உரிய முறைமைகளுக்கேற்ப அதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். 

பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் வளாகத்துக்கும் ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். சுற்றியுள்ள பகுதிகளை அழகாகவும் முறையாகவும் பேணிவருவது தொடர்பாக இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

முறையான திட்டமொன்றினூடாக சூழலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பகிரவும்...