அரசாங்கத்தின் கொடூரமான அடக்கு முறைகள் மேலும் அதிகரித்து விட்டன – கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தற்போதைய அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போராட்டத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 75 நாட்களாக தடுத்துவைத்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வேலைத் திட்டம் மக்களை ஏமாற்றும் நாடகமே என்றும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...