Main Menu

அமெரிக்க பாடகர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான ராப் (Rap) இசைப் பாடகர் நிப்சே ஹஸ்ஸில் (Nipsey Hussle) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் உள்ளூர் நேரம் 3.30 மணியளவில் கடை ஒன்றின் முன்னே வைத்து இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமி (Grammy) விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிப்சே ஹஸ்ஸில்-இன் மரணத்துக்கு பிரபல பாடகர்களான ட்ரேக் மற்றும் ரிஹானா ஆகியோர் உட்பட பல கலைஞர்களும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.