அன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி
ஆப்பிளின் iOS சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் கைவிரல் அடையாளம் மற்றும் முக அடையாளங்களை வைத்து பாதுகாப்பு அளிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
இதற்காக Toch ID மற்றும் Face ID பயன்படுத்தப்படுகின்றது.
எனினும் இதுவரை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் இவ் வசதி தரப்பட்டிருக்கவில்லை.
ஆனால் முதன் முறையாக அன்ரோயிட் பீட்டாவில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் ஆப் பதிப்பில் கைவிரல் அடையாளத்தை வைத்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் வசதியானது வாட்ஸ் ஆப்பின் Setting பகுதியில் உள்ள Account என்பதில் உள்ள Privacy இல் தரப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
இது தவிர மேலும் சில புதிய வசதிகளை அன்ரோயிட் பீட்டாவிற்கான வாட் ஆப் அப்பிளிக்கேஷன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.