அனர்த்தத்தில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்தவங்கிக் கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு கொழும்பு போராயர் அவர்கள் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.
இந்த வங்கி கணக்கிற்கு ” 2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு தேவாலயங்களை புனரமைப்பதற்கான விஷேட நிதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது” . பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் கணக்கிலக்கம் 1190038741 என்ற கணக்கிலக்கத்திற்கு உங்களது நன்கொடையை வழங்க முடியும் என்று பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.