அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் குறித்த சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டதை அடுத்து கடந்த மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசாத் சாலியால் இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.