Main Menu

Pôle emploi – இனிமேல் தொலைபேசித் தொடர்புகள் மட்டும்!

உள்ளிருப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வேலை மேடுவோரிற்கான அவசர தேவைகளிற்காகவும், மிகவும் முக்கிய சந்திப்புக்களிற்காகவும், Pôle emploi திறந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் Pôle emploi அதிகாரிகளின் தொழிற்சங்கம் இதனை எதிர்த்து, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அனைத்துக் கிளைகளையும் மூடவேண்டும் எனப் பணித்திருந்தது. இதனால் இன்றிலிருந்து, வேலை தேடுவோர்கள் தங்களது அலோசகர்களுடன் (conseiller) தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்று, நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3949 இனை அழைப்பதன் மூலம் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் Pôle emploi தெரிவித்துள்ளது.

பகிரவும்...